/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி கீழச்சேரி நிழற்குடை மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
/
பராமரிப்பின்றி கீழச்சேரி நிழற்குடை மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
பராமரிப்பின்றி கீழச்சேரி நிழற்குடை மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
பராமரிப்பின்றி கீழச்சேரி நிழற்குடை மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
ADDED : பிப் 04, 2025 01:22 AM

கடம்பத்துார், பிப். 4-
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்காலனி பகுதியில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் பேரம்பாக்கம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.
இந்த நிழற்குடை போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. மதுப்பிரியர்கள் நிழற்குடையை மதுக்கூடமாக பயன்படுத்துகின்றனர். மேலும், விளம்பரங்கள் ஒட்டும் இடமாகவும், குப்பை நிறைந்தும் உள்ளது.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, மேட்டுக்காலனி பகுதியினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.