/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம்
/
கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம்
ADDED : நவ 26, 2025 05:08 AM

ஊத்துக்கோட்டை: மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், பூண்டி நீர்த்தேக்கம் நிறைந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
கொசஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் அமைந்துள்ளது சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம். இதன் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. நீர்த்தேக்கத்தின் நடுவே, உபரிநீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன.
மழைநீர் மற்றும் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வழியே வரும் கிருஷ்ணா நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரம். தற்போது கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வரத்தால் பூண்டி நீர்தேக்கம் நிரம்பி, கடல்போல் காட்சியளிக்கிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 2.690 டி.எம்.சி., நீர்மட்டம், 33.57 அடி. பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர், ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் அணைக்கட்டு வழியே வினாடிக்கு, 380 கன அடி நீர் நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது.
அங்குள்ள இணைப்பு கால்வாய் வழியே, புழலேரிக்கு வினாடிக்கு, 400 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, 300 கன அடி என மொத்தம், 700 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. மதகு வழியே தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு உள்ளது.

