/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ள புதுச்சத்திரம் கோவில் குளம்
/
பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ள புதுச்சத்திரம் கோவில் குளம்
பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ள புதுச்சத்திரம் கோவில் குளம்
பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ள புதுச்சத்திரம் கோவில் குளம்
ADDED : ஜன 13, 2025 01:33 AM

புதுச்சத்திரம்:திருமழிசை அடுத்த, புதுச்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சொர்ணாம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், 2022ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சீரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வந்தன.
இந்த கோவிலில் 60 ஆண்டுகளுக்குப் பின், 2023ம் ஆண்டு, நவ. 19ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இந்த கோவில் அருகே குளத்தை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், இந்த கோவில் குளம் எவ்வித பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், குப்பை கொட்டப்பட்டு பாசி படர்ந்து படிகள் சேதமடைந்து உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அருணாச்சலேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.