/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
/
குடியிருப்பு சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
குடியிருப்பு சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
குடியிருப்பு சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
ADDED : ஜூலை 21, 2025 11:50 PM

திருமழிசைதிருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பிரையாம்பத்து பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மழைகாலங்களில் பள்ளிக்கு வரும் சாலை குளம்போல் மாறி விடுகிறது.
இதனால், மாணவர்கள் மற்றும் பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அருகிலேயே பேரூராட்சி அலுவலகம் இருந்தும், சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குடியிருப்பு பகுதியில் மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.