/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு
/
பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு
பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு
பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு
ADDED : ஜன 07, 2025 07:24 AM

திருத்தணி :  திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே, கோட்டாட்சியர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றுபவர்கள் தங்கியிருப்பர். ஒன்றரை ஆண்டுக்கு முன் வரை பணிபுரியும் கோட்டாட்சியர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியும், அலுவல் பணிகளும் குடியிருப்பில் இருந்தவாறு கவனிப்பர்.
இந்நிலையில், கடந்தாண்டு புதியதாக கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பெண் கோட்டாட்சியர் அலுவலக குடியிருப்பில் தங்காமல், திருத்தணி நகரத்தில் தனிநபருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றார்.
இதனால், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு ஒராண்டாகவே பூட்டியே கிடக்கிறது. இதனால், கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், அலுவலக கட்டடம் நாளுக்கு நாள் பழுதடைந்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அரசு பணம் வீணாகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, கோட்டாட்சியர் குடியிருப்பை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர்  தீபா தரப்பில் கூறுகையில், ''குடும்ப பாதுகாப்பு கருதி, கோட்டாட்சியர் குடியிருப்பில் தங்காமல், திருத்தணி நகரில், வாடகை வீட்டில் தங்கி பணிபுரிகிறேன். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்றுள்ளேன்,'' என கூறினார்.

