ADDED : ஜன 18, 2026 06:19 AM

அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு, ஜன. 18-
பள்ளிப்பட்டு ஒன்றியம் கீச்சலத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, பள்ளிப்பட்டு -- திருத்தணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இப்பள்ளிக்கு எதிரே உள்ள வளைவில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப் பட்டுள்ளன.
இந்த பதாகைகளை தாங்கி நிற்கும் கம்பங்களில், சிலர் மாடுகளை கட்டி வைக்கின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். எனவே, மாடுகளை கட்டி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
