/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனைவி பிரிந்த சோகம் வாலிபர் தற்கொலை
/
மனைவி பிரிந்த சோகம் வாலிபர் தற்கொலை
ADDED : நவ 17, 2024 10:04 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ராஜாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகன் சதீஷ்குமார், 42.
மொபைல் போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் இவருக்கு சாம்பவி, 38 என்ற மனைவியும், 12 வயதில் மகனும் உள்ளனர்.
சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2017 ம் ஆண்டு விவாகரத்து பெற்று மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் சதிஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
கடந்த 15ம் தேதி இவரது பெற்றோர், உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் மாடியில் மின்விசிறியில் துாக்கில் தொங்கியபடி சதீஷ்குமார் கிடந்துள்ளார்.
திருவள்ளூர் நகர போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.