/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இறுதி கட்டத்தை எட்டியுள்ள சோளிங்கர் ரோப்கார் பணி
/
இறுதி கட்டத்தை எட்டியுள்ள சோளிங்கர் ரோப்கார் பணி
ADDED : பிப் 24, 2024 01:18 AM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஒரு கடிகை அதாவது, 24 நிமிடங்கள் இந்த தலத்தில் பெருமாளை வேண்டிக்கொண்டால் நிறைந்த பலனை பெறலாம் என்பது ஐதீகம்.
இதனால், திருக்கடிகை என்ற பெயரும் இந்த தலத்திற்கு உண்டு. 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கு, முதியோர் வந்து தரிசனம் செய்வது கடினமாக உள்ளது. இதனால், ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையின் படி, 12 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் வசதி ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2023 மார்ச் மாதம், ரோப் கார் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது.
தற்போது, மலைக்கோவிலில் லிப்ட் வசதி, ரோப் கார் மையத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்து, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.