/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விரைவு ரயில் இன்ஜின் நிறுத்தும் இடம் திருவள்ளூரில் பயணியர் அவதி
/
விரைவு ரயில் இன்ஜின் நிறுத்தும் இடம் திருவள்ளூரில் பயணியர் அவதி
விரைவு ரயில் இன்ஜின் நிறுத்தும் இடம் திருவள்ளூரில் பயணியர் அவதி
விரைவு ரயில் இன்ஜின் நிறுத்தும் இடம் திருவள்ளூரில் பயணியர் அவதி
ADDED : ஜன 04, 2024 09:10 PM

திருவள்ளூர்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் திருப்பதி, பாலக்காடு, ஏலகிரி, மும்பை உள்ளிட்ட சில ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்த ரயில்களில், தினமும் நுாற்றுக்கணக்கானோர், முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
சென்னையில் இருந்து வரும் விரைவு ரயில்கள், பெரும்பாலும், இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. இந்த ரயில்களின் இன்ஜின்கள் நிறுத்துவதை அதன் ஓட்டுனர்கள் அடையாளம் காண்பதற்காக, தண்டவாளத்தில் 'ஸ்டாப்' பலகை வைக்கப்பட்டிருக்கும்.
ரயில் இன்ஜினில் இருந்து, முன்பதிவற்ற பெட்டி, முன்பதிவு பெட்டிகளின் எண் ஆகியவை, நடைமேடையில் உள்ள தகவல் பலகையில், மின்னணு தகவல் பலகையில் காண்பிக்கும். ஆனால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 2வது பாதையில் இந்த பலகை அமைக்கப்படவில்லை.
இதனால், ரயில் ஓட்டுனர்கள் தங்கள் வசதிக்கு இன்ஜினை நிறுத்துவதால், மின்னணு தகவல் பலகையில் காண்பிக்கும் பெட்டி எண்ணிற்கும், வந்து நிற்கும் ரயில் பெட்டிகளின் எண்ணிற்கும் இடைவெளி ஏற்படுகிறது.
இதனால், நடைமேடை அருகில் காத்திருக்கும் பயணியர், தாங்கள் பயணம் செய்யும் பெட்டி எண்களை தேடி அலைந்து, சிரமத்துடன் செல்கின்றனர்.
எனவே, ரயில்வே துறையினர், திருவள்ளூர் 2வது தண்டவாளத்தில், ரயில் நிறுத்தும் இடம் குறித்து, தகவல் பலகை அமைக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.