/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை நகரமாக மாறி வரும் கோவில் நகரம் நோய் அபாயத்தில் திருமழிசை பகுதிவாசிகள்

ADDED : அக் 11, 2024 02:15 AM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 150க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஒத்தாண்டேஸ்வரர் கோவில், ஜெகந்நாத பெருமாள் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளதால் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவில் நகரம் என பெயர் பெற்ற இங்குள்ள தெருக்களில் குப்பை முறையாக அகற்றப்படாததால் பல பகுதியில் சாலையோரம் தேங்கி கிடக்கிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் குவிந்து கிடக்கும் குப்பையில் கால்நடைகள் உணவு தேடி குப்பையை கிளறுவதால் துர்நாற்றம் ஏற்படுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் தினமும் குப்பை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.