/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசார் ஓய்வறை படுமோசம் காட்சி பொருளாக மாறிய அவலம்
/
போலீசார் ஓய்வறை படுமோசம் காட்சி பொருளாக மாறிய அவலம்
போலீசார் ஓய்வறை படுமோசம் காட்சி பொருளாக மாறிய அவலம்
போலீசார் ஓய்வறை படுமோசம் காட்சி பொருளாக மாறிய அவலம்
ADDED : மார் 17, 2025 01:33 AM

திருத்தணி:தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி மற்றும் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனைக்காக 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.
இங்கு பணிபுரியும் போலீசார் நலன் கருதி, 2017ம் ஆண்டு தமிழக அரசு, 4.77 லட்சம் ரூபாயில் சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் ஓய்வெடுக்கவும், குளிப்பதற்கும், இயற்கை உபாதை கழிப்பதற்காகவும், அப்போதைய அ.தி.மு.க-., அமைச்சர் பெஞ்சமின் ஓய்வறையை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த ஓய்வறையை முறையாக போலீசார் பராமரிக்காததால், தற்போது அறை சேதமடைந்துள்ளது. இதனால், போலீசார் அங்கு தங்குவதில்லை. இதை முறையாக பயன்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், அரசு பணம் வீணாகி வருகிறது.
தற்போது, அந்த இடம் முழுதும் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே, மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, போலீசார் ஓய்வெடுக்கும் அறையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.