/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத குளம் பேரூராட்சி அலட்சியம்
/
பராமரிப்பு இல்லாத குளம் பேரூராட்சி அலட்சியம்
ADDED : ஏப் 06, 2025 11:32 PM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரின் வடமேற்கில் ஏரி அமைந்துள்ளது. தென்மேற்கில் குசா ஆறு பாய்கிறது. தென் கிழக்கில் கொசஸ்தலை ஆறு பாய்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே எட்டிமூர்த்தி குளம் நகரின் கூடுதல் நீராதாரமாக விளங்கி வருகிறது.
வற்றாத நீர்வளத்துடன் செழிப்பாக காணப்படும் பள்ளிப்பட்டில், எட்டிமூர்த்தி குளத்தின் நிலை தற்போது கேட்டாரற்று கிடக்கிறது. குளத்தில் நீர் நிரம்பியும் பயனின்றி மாசடைந்துள்ளது.
பரந்து விரிந்துள்ள இந்த குளம், கடந்த 2012ல் நபார்டு திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. குளத்திற்கு சீரான படிகளுடன் நடைபயிற்சி பாதை ஏற்படுத்தப்பட்டது. அதன்பின், பேரூராட்சி நிர்வாகம் குளத்தை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனால், இந்த குளக்கரை செடி, கொடிகள் வளர்ந்து சீரழிந்து கிடக்கிறது. குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரும் குப்பையால் நிரம்பி வழிகிறது. எனவே, எட்டிமூர்த்தி குளத்தை மீண்டும் புனரமைத்து, நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

