/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
/
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED : ஆக 11, 2025 01:29 AM

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், 13ம் ஆண்டு, வள்ளி முருகன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திருமண வரம் வேண்டி திரளான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றனர்.
கோவில் பிரகாரத்தில், காலை, 9:00 மணியவில் வள்ளி மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அழகிய மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. திருகயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமண கோலத்தில், வள்ளி மணவாள பெருமான் உள்புறப்பாடு சென்றனர்.
பிரசாதமாக பெற்ற மாலையை அணிந்தபடி, பிரார்த்தனையாளர்கள், வள்ளி மணவாள பெருமானை பின் தொடர்ந்து, ஆறு முறை கோவிலை வலம் சென்று வேண்டிக்கொண்டனர்.