/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பக்தோசித பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
/
பக்தோசித பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
ADDED : ஏப் 11, 2025 11:01 PM
சோளிங்கர்:ஆண்டாள் நாச்சியார், நந்தகோபன் கிருஷ்ணர் தன்னை திருமணம் செய்வதாக கனவு கண்டார். அதை பாசுரமாக பாடினார். ஆண்டாள் கண்ட கனவை நனவாக்கும் விதமாக, பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம், பெருமாள் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.
சோளிங்கர் ஊர் கோவிலில் இருந்து நரசிம்மரின் உத்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், நேற்று காலை பெரிய மலையில் எழுந்தருளினார்.
பகல் 12:00 மணிக்கு புஷ்பயாக மண்டபத்தில் தாயார் எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.
மாலை 4:30 மணிக்கு காசி யாத்திரை மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 8:30 மணிக்கு சுவாமி மணக்கோலத்தில் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

