நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னி, 38. இவரது வீட்டிற்கு முன், பக்கத்து வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீருடன் கலப்பது தொடர்பாக சந்தியா என்பவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 9ம் தேதி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த பொன்னி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து சந்தியா வீட்டின் முன் தன் உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.