ADDED : ஜூலை 31, 2025 01:18 AM

பழவேற்காடு:பழவேற்காடில் மத்தி, கானாங்கெளுத்தி உள்ளிட்ட மீன்களை கருவாடாக தயாரிக்கும் பணியில், மீனவ பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பழவேற்காடு கடல் மற்றும் ஏரியில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் இறங்கு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் மத்தி, கானாங்கெளுத்தி உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதேசமயம் உள்ளூர் மீனவப்பெண்கள் இவற்றை வாங்கி, அதை கருவாடாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மத்தி, கானாங்கெளுத்தி, அயிலா உள்ளிட்ட சிறிய வகை மீன்களை வாங்கி, அவற்றை சுத்தப்படுத்தி, உப்புநீரில் ஊறவைத்து, வெயிலில் உலர வைக்கின்றனர்.
பின் அவற்றை விற்பனைக்கு அனுப்புகின்றனர். கோழித்தீவனம், இறால் தீவனம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகிறது.
பழவேற்காடு மீன் இறங்கு தளம் வளாகத்தில், கருவாடு தயாரிக்கும் பணியில் மீனவப்பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.