/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்கு வழி சாலையில் தடுப்புச்சுவர் பணி வேகம்
/
நான்கு வழி சாலையில் தடுப்புச்சுவர் பணி வேகம்
ADDED : நவ 16, 2025 02:29 AM

ஆர்.கே.பேட்டை: நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பை தடுக்கும் வகையில், வெள்ள தடுப்புச்சுவர் பணி வேகமெடுத்துள்ளது.
ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் வழியாக சித்துார் செல்லும் மார்க்கத்தில், அஸ்வரேவந்தாபுரம் - கோபாலபுரம் வரை நான்கு வழிசாலையாக சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில், வீரகோவில்மோட்டூர் இணைப்பு சாலையில் உள்ள பாலத்தை ஒட்டி மண்ணரிப்பு ஏற்பட்டது.
இதனால், சாலை சரிந்து விழுந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், தற்போது வெள்ள தடுப்புச்சுவர் கட்டும் பணி வேகமெடுத்துள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.
இயந்திரங்களின் உதவியுடன் மண் கொட்டி வெள்ளத்திற்கு தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
கட்டுமான பணிகள் நடந்து வரும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

