நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு அருகே கடன் தொல்லை காரணமாக வாலிபர் மாயமானார்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி கிராமம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் லோகேஷ் 32. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அதே கிராமத்தில் மற்றும் பணியாற்றும் இடம் என பல்வேறு இடங்களில் பலரிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியாமல் திணறி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் நண்பர்களிடம் விசாரித்தும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.
இதுகுறித்து லோகேஷூன் மனைவி செல்வி அளித்த புகாரையடுத்து வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார், அவரை தேடி வருகின்றனர்.