/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED : செப் 07, 2025 10:18 PM
பள்ளிப்பட்டு:திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக ந டந்தது. பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டையில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 4ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சிகள் நடந்தன.
தினமும் மாலை 6:00 மணிக்கு, தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் வீதியுலா வந்தார். இரவு 10:00 மணிக்கு நடைபெற்று வந்த தெருக்கூத்து நிகழ்ச்சியில், உள்ளூர் பக்தர்கள் பலரும் வேடம் அணிந்து, மகாபாரத நிகழ்வுகளை நடித்து காட்டினர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற்றன. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.