/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுத்தடுத்த 4 கடைகளில் திருட்டு
/
அடுத்தடுத்த 4 கடைகளில் திருட்டு
ADDED : ஜன 30, 2024 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் டிபன் கடை, பங்க் கடை, குளிர்பானம் மற்றும் பழக் கடை என, அடுத்தடுத்த நான்கு கடைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து, பணம் மற்றும் தின்பண்டங்களை திருடிச் சென்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் கடைகளின் உரிமையாளர்கள் திறக்க சென்ற போது, கடைகள் பூட்டு உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது. நான்கு கடைகளிலும் பணம் அதிகளவில் இல்லாமல் இருந்ததால் கடை உரிமையாளர்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை.