தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : செப் 07, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மீஞ்சூர், செப். 8–

பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வடசென்னை அனல் மின் நிலைய தொழிலாளர்கள், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்து, தினமும் 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும், பணிகளை புறக்கணித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:

கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை, உடனடியாக காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us