/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
25ல் திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்
/
25ல் திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்
ADDED : ஜூலை 17, 2025 09:47 PM
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் வரும் 25ம் தேதி துணைத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
பேரூராட்சி செயலர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருமழிசை பேரூராட்சியில் 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் 2024ம் ஆண்டு மே மாதம் தி.மு.க., பேரூராட்சி தலைவர் வடிவேல் விபத்தில் இறந்தார். இதையடுத்து ஆகஸ்டில் நடந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐந்து அ.தி.மு.க., வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு பா.ஜ., உறுப்பினர் தேர்தலை புறக்கணித்ததால் துணைத்தலைவராக பதவி வகித்த மகாதேவன் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 25ல் நடைபெற உள்ளது. துணைத்தலைவர் பதவிக்கு அனைத்து பிரிவினரும் போட்டியிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.