/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.5 லட்சம் போதை பொருள் பறிமுதல் திருநின்றவூர் வாலிபருக்கு சிறை
/
ரூ.5 லட்சம் போதை பொருள் பறிமுதல் திருநின்றவூர் வாலிபருக்கு சிறை
ரூ.5 லட்சம் போதை பொருள் பறிமுதல் திருநின்றவூர் வாலிபருக்கு சிறை
ரூ.5 லட்சம் போதை பொருள் பறிமுதல் திருநின்றவூர் வாலிபருக்கு சிறை
ADDED : பிப் 22, 2024 10:53 PM

திருவள்ளூர், திருவள்ளூரிலிருந்து திருநின்றவூருக்கு சரக்கு வாகனத்தில் குட்கா உட்பட போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக நேற்று மதியம் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் செவ்வாப்பேட்டை சி.டி.எச். நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டி.என்.87 ஈ 0974 என்ற பதிவெண் கொண்டு டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 205 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருநின்றவூர் ராஜராஜ சோழன் நகரைச் சேர்ந்த நவீன்குமார், 33 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் எங்கிருந்து போதைப்பொருட்கள் வந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஆவடி காவல் துணை கமிஷனர் அய்மான் ஜமால் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ம.ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கூல் லிப், ஹான்ஸ் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட 205 கிலோ போதைப்பொருட்கள் மதிப்பு 5 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார் நவீன்குமாரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இருவர் கைது
அரக்கோணம் புதிய பஸ் நிலையம், சோளிங்கர் ரோடு, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரக்கோணம் -சோளிங்கர் ரோடு மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சுவால்பேட்டை சுப்புராயன் தெருவைச் சேர்ந்த சோபன்பாபு, 24. மற்றும் சுவால்பேட்டை கண்ணன் மாவு மில் தெருவைச் சேர்ந்த கண்ணன் 29. என்பதும் மேலும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.