/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
திருத்தணி ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 06, 2025 02:43 AM

திருத்தணி:திருத்தணி போலீஸ் சப் - டிவிஷன் ஏ.எஸ்.பி., யாக, ஷூபம் திவான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருத்தணி போலீஸ் சப் - டிவிஷனில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த கந்தன், கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, திருத்தணி சப் - டிவிஷன் ஏ.எஸ்.பி.,யாக ஷூபம் திவான் நியமிக்கப்பட்டார். இவர், கோயம்புத்துாரில் சட்டம் - ஒழுங்கு அகாடமியில், ஏ.எஸ்.பி.,யாக பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், புதிய ஏ.எஸ்.பி., ஷூபம் திவான், நேற்று காலை திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சென்று, மூலவர், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் பூஜை செய்து வழிப்பட்டார். தொடர்ந்து, திருத்தணி ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது, 'திருத்தணி சப் - டிவிஷனில், திருட்டு, வழிப்பறி மற்றும் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் தடுக்கப்படும்' என, ஷூபம் திவான் கூறினார்.

