/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருத்தணி டி.எஸ்.பி., எச்சரிக்கை
/
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருத்தணி டி.எஸ்.பி., எச்சரிக்கை
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருத்தணி டி.எஸ்.பி., எச்சரிக்கை
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருத்தணி டி.எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : டிச 28, 2024 08:52 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும் 31ம் தேதி படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இந்நிலையில், திருத்தணி போலீசார் சார்பில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான ஆலோசனை கூட்டம், போலீஸ் பேரக்ஸில், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் நேற்று நடந்தது.
எஸ்.ஐ., கார்த்திக் வரவேற்றார். இதில் திருத்தணியில் உள்ள, 11 ஆட்டோ கிளை சங்கத்தில் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, மொத்தம் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் பேசியதாவது:
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரே ஒரு மலைப்பாதையில் சென்று வர வேண்டியுள்ளன. சில ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை விதிமுறைகள் மீறி, பக்தர்களுக்கு இடையூறாகவும், இறங்கும் வாகனங்களுக்கு இடையூறாக செல்வதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது.
எனவே, மலைப்பாதையில் ஆட்டோக்கள் செல்லும் போது விதிமுறைகள் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் வசூலிக்கப்படும்.
அதே போல, சாதாரண நாட்கள் மற்றும் விழா நாட்கள் என, நிர்ணயித்த கட்டணத்தை தான் ஆட்டோ ஓட்டுனர்கள் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பக்தர்களுக்கு இடையூறு கொடுத்தாலும் காவல் துறை வேடிக்கை பார்க்காது.
மலைக்கோவிலில், 30 ஆட்டோக்கள் மட்டுமே நிறுத்த வேண்டும். வரும் 31ம் தேதி படித் திருவிழா, ஜன.1ம் தேதி ஆங்கில புத்தாண்டு ஆகிய இரு நாட்கள் மலைப்பாதையில் எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி கிடையாது.
ஆகையால் ஆட்டோ ஓட்டுனர் மலைப்பாதை நுழைவாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இதை மீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.