/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தாசில்தார், ஆணையர் பொறுப்பேற்பு
/
திருத்தணி தாசில்தார், ஆணையர் பொறுப்பேற்பு
ADDED : அக் 15, 2025 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி தாசில்தாராக பணியாற்றி வந்த மலர்விழி, ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, வீட்டுவசதி வாரிய தனி தாசில்தார் குமார், திருத்தணி தாசில்தாராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
திருத்தணி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
கடந்த 9ம் தேதி, சங்கரன் கோவில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சாம்கிங்ஸ்டன், திருத்தணி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார்.