தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி கோவில் அஞ்சல் அட்டை உற்சவர் முருகன் முத்திரை வெளியீடு

திருத்தணி கோவில் அஞ்சல் அட்டை உற்சவர் முருகன் முத்திரை வெளியீடு

திருத்தணி கோவில் அஞ்சல் அட்டை உற்சவர் முருகன் முத்திரை வெளியீடு


UPDATED : மே 30, 2026 05:59 PM

ADDED : மே 30, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 05:59 PM ADDED : மே 30, 2026 05:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி:அஞ்சல் துறையின் சார்பில், திருத்தணி முருகன் கோவில் படம் கொண்ட போஸ்ட் கார்டு, முருகன் உருவம் பதித்த நிரந்தர சித்திர முத்திரை அஞ்சல் தலை ஆகியவை, நேற்று திருத்தணியில் வெளியிடப்பட்டன.

திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம், காஞ்சிபுரம் கோட்டத்தின் சார்பில், திருத்தணி முருகன் கோவில் முருகர் உருவம் பதித்த நிரந்தர சித்திர முத்திரை மற்றும் திருத்தணி முருகன் கோவில் படம் கொண்ட அஞ்சல் அட்டை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது.

இதில், சென்னை நகர மண்டல இயக்குநர் மனோஜ் பங்கேற்று, முருகன் கோவில் உற்சவர் முருகர் முத்திரை மற்றும் முருகன் கோவில் படம் கொண்ட அஞ்சல் அட்டையை வெளியிட, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வரவேற்று பேசினார். தொடர்ந்து, சென்னை மண்டல இயக்குநர் மனோஜ், கோவில் இணை ஆணையர் ரமணி, திருத்தணி கோவில் தபால் தலை மற்றும் முத்திரை வெளியிட்டதன் காரணம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில், காஞ்சிபுரம் கோட்ட கூடுதல் தலைமை அஞ்சலக அதிகாரி முரளிதரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us