sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருக பெருமான் மாட்டு வண்டியில் வீதியுலா

/

திருத்தணி முருக பெருமான் மாட்டு வண்டியில் வீதியுலா

திருத்தணி முருக பெருமான் மாட்டு வண்டியில் வீதியுலா

திருத்தணி முருக பெருமான் மாட்டு வண்டியில் வீதியுலா


ADDED : ஜன 17, 2024 10:05 PM

Google News

ADDED : ஜன 17, 2024 10:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவை ஒட்டி, மூன்று நாட்கள் திருத்தணியில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி, வீதிகள் தோறும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி, மூன்றாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார்.

பின்னர், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் வீதியுலா சென்றார்.

மாலை 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள சண்முக தீர்த்த குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இரவு, 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றார். உற்சவர் முருக பெருமான் வீதியுலா வருவதை முன்னிட்டு, நகர் முழுதும் பெண்கள் தெருக்களில் வண்ண வண்ண கோலங்கள் போட்டும், தேங்காய் உடைத்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us