/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குரங்குகள் தொல்லை
/
திருத்தணி கோவிலில் குரங்குகள் தொல்லை
ADDED : பிப் 13, 2024 08:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் குரங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மலைக்கோவில் வளாகம், தேர்வீதி மற்றும் கோவில் உட்புறத்தில் உள்ள கொடி மரம், பொதுவழி மற்றும் சிறப்பு தரிசனம் வழி ஆகிய இடங்களில், 70க்கும் மேற்பட்ட குரங்குகள் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
பக்தர்கள் அர்ச்சனைக்காக கொண்டு வரும் தேங்காய், வாழைப்பழம் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களை கண்டதும், குரங்குகள் பறித்து செல்கின்றன.
எனவே கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

