தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துருப்பிடித்து வீணாகும் இரும்பு கம்பிகள்: திருவாலங்காடு அதிகாரிகள் அலட்சியம்

துருப்பிடித்து வீணாகும் இரும்பு கம்பிகள்: திருவாலங்காடு அதிகாரிகள் அலட்சியம்

துருப்பிடித்து வீணாகும் இரும்பு கம்பிகள்: திருவாலங்காடு அதிகாரிகள் அலட்சியம்


UPDATED : ஆக 30, 2026 03:39 PM

ADDED : ஆக 30, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 03:39 PM ADDED : ஆக 30, 2026 02:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், மானிய விலையில் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால், துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் மத்திய - மாநில அரசு நிதியில் கட்டப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த இரும்பு கம்பிகளை பாதுகாப்பாக வைக்க கிடங்கு வசதி இல்லாததால், திறந்தவெளியில் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வெயில் மற்றும் மழையில் நனைந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

இந்த வளாகத்தில் எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கம்பிகளை திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. பயனாளர்களுக்கு வழங்கும் கம்பிகளை அலட்சியமாக கையாளும் அதிகாரிகள் மீது, திருவள்ளூர் கலெக்டர் கவிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இரும்பு கம்பிகளை பாதுகாக்க கிடங்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us