/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் : புகார் பெட்டி; பேருந்துகள் நின்று செல்லுமா?@
/
திருவள்ளூர் : புகார் பெட்டி; பேருந்துகள் நின்று செல்லுமா?@
திருவள்ளூர் : புகார் பெட்டி; பேருந்துகள் நின்று செல்லுமா?@
திருவள்ளூர் : புகார் பெட்டி; பேருந்துகள் நின்று செல்லுமா?@
ADDED : ஆக 21, 2024 09:22 PM
பேருந்துகள் நின்று செல்லுமா?@@
திருத்தணி- - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை இ.என்.கண்டிகை பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாடூர், செருக்கனுார், தலையாறிதாங்கல் உள்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்க்கத்தில் மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள், அரசு டவுன் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. சித்துார், வேலுார், பெங்களூரு போன்ற இடங்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகள் நின்று செல்வதில்லை. இதனால் மேற்படி கிராம மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இவ்வழியாக செல்லும் அனைத்து விரைவு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும்.
ஜி.கே. லோகநாதன், இ.என்.கண்டிகை.
ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்
திருத்தணி நகரம் காந்திரோடு, திரவுபதியம்மன் கோவில், கலைஞர்நகர் மற்றும் முருகப்பநகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சில குடிமகன்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தகாத முறையில் பேசுகின்றனர்.
இதனால் பெண்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். குறிப்பாக, நல்லதண்ணீர் குளம் பகுதியில் காலை முதல் நள்ளிரவு வரை சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே போலீசார் மேற்கண்ட பகுதிக்கு வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. எனவே, தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்.
---எஸ். செல்வா , திருத்தணி.