/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'அர்ஜூனா' விருது பெற்ற திருவள்ளூர் வீராங்கனை
/
'அர்ஜூனா' விருது பெற்ற திருவள்ளூர் வீராங்கனை
ADDED : ஜன 04, 2025 01:42 AM

திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கான, 'பாரா ஒலிம்பிக்' போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, திருவள்ளூர் வீராங்கனைக்கு, அர்ஜூனா விருது கிடைத்துள்ளது.
விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனையருக்கு, மத்திய அரசு உயர் விருது பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில், ஆசிய விளையாட்டு போட்டியில், 'பாரா ஒலிம்பிக்' போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, திருவள்ளூரைச் சேர்ந்த மணிஷா இடம் பெற்றுள்ளார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 'பாரா பேட்மின்டன்' விளையாடி வரும் இவர், தனியார் கல்லுாரியில், இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதுகுறித்து, மணிஷா கூறுகையில், ''விளையாட்டு துறையில் உயர் விருதான அர்ஜூனா விருதை, மத்திய அரசு எனக்கு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஊக்கத்துடன், 2028ல் நடக்கும் போட்டியில், தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்,'' என்றார்.

