/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை
/
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை
ADDED : பிப் 17, 2025 02:13 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், தனியார் கல்லூரி மையங்களில், இன்று, கலெக்டர் பிரதாப், பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டினை மேம்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்து வருவதை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டினை மேம்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மையங்களில் நடந்து வருகிறது.
இதையடுத்து, நேற்று, திருவள்ளூர் அடுத்த, பாண்டூர் பகுதியில் இந்திரா கல்லுாரியில் நடந்து வரும் சிறப்பு வகுப்பு மையத்தில், கலெக்டர் பிரதாப், பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின், திருவாலங்காடு அடுத்து உள்ள பழையனுார் பகுதியில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை வாயிலாக, விவசாயிகளின் நில உடமை விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் விரைந்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்
இதில், பள்ளிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் பவானி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெபகுமாரி அனி, திருவாலங்காடு வேளாண்மை பொறுப்பு உதவி இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

