/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலை அருகே இடையூறாக மின்கம்பம்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலை அருகே இடையூறாக மின்கம்பம்
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலை அருகே இடையூறாக மின்கம்பம்
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலை அருகே இடையூறாக மின்கம்பம்
ADDED : பிப் 22, 2024 01:22 AM

சாலை அருகே இடையூறாக மின்கம்பம்
சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது ராமஞ்சேரி கிராமம்.
இங்கு, தேசிய நெடுஞ்சாலை வளைவில் மின் வாரிய அலுவலகம் எதிரே சாலையை கடந்து மின் கம்பி செல்ல இருபுறமும் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பம் சாலையை ஒட்டி உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் இருந்து சற்று தள்ளி அமைக்க மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.வேலு, கனகம்மாசத்திரம்.
வேகத் தடைகளுக்கு வண்ணம் பூசப்படுமா
?
திருத்தணி நகராட்சியில் விபத்துகளை தடுப்பதற்காக அரக்கோணம் சாலை, சித்துார் சாலை, ம.பொ.சி., சாலை ஆகிய இடங்களில், 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர்.
ஆனால், வேகத்தடைகளுக்கு தற்போது வண்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் தரமான வண்ணம் பூசப்படாததால், சில நாட்களிலேயே வேகத்தடைகளுக்கு பூசப்பட்ட வண்ணம் அழிந்து விடுகின்றன. எனவே, நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டிகளின் நலன் கருதி வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- க.முத்து, திருத்தணி.
மெதுாரில் குரங்குகள் அட்டகாசம்
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் ஏராளமான குரங்கள் சுற்றித் திரிகின்றன. இவை, அங்குள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்களை அள்ளிச் செல்கின்றன. அவை கடைகளுக்குள் நுழையும்போது விரட்ட முயன்றால் அச்சுறுத்துகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பேருந்திற்கு காத்திருக்கும் பயணியரும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். குரங்குகளை பிடித்து, வனப்பகுதிகளில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பி.சேகர், மெதுார்.