/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் :புகார் பெட்டி ;நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எப்போது?
/
திருவள்ளூர் :புகார் பெட்டி ;நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எப்போது?
திருவள்ளூர் :புகார் பெட்டி ;நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எப்போது?
திருவள்ளூர் :புகார் பெட்டி ;நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எப்போது?
ADDED : செப் 05, 2024 12:35 AM

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எப்போது?
கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டமாக திரியும் நாய்கள், ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் குரைத்தபடி சண்டையிடுகிறது.
அதை கண்டு சிறுவர் - சிறுமியர் மற்றும் பெண்கள் மிரண்டு ஓடுகின்றனர். விரட்டுபவர்கள் மீது கடிக்க பாய்வதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக அதிகாலை நடைபயிற்சி செல்பவர்கள், இரவில் வேலைக்கு சென்று வீடு திரும்புவர்களை, நாய்கள் விரட்டி செல்லும் சம்பவம் தினமும் அரங்கேறி வருகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.
நீர்வரத்து கால்வாய் சீரமைக்க கோரிக்கை
திருத்தணி ஒன்றியம் தலையாறிதாங்கல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், முறையாக நீர்வளத் துறையினர் பராமரிக்காததால் மாயமாகி வருகிறது.
மேலும் நீர்வரத்து கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், சில ஆண்டுகளாக பருவ மழை பெய்தும், தண்ணீர் வரத்து இல்லாமல், வறண்டு காணப்படுகிறது. நிதி பற்றாக்குறையால் கால்வாய் பணிகள் செய்ய முடியவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, தலையாறிதாங்கல் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
- எஸ்.பாலாஜி, தலையாறிதாங்கல்.