/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை தொழிலாளர்களுக்கு மாலை நேர வகுப்பு துவக்கம்
/
குழந்தை தொழிலாளர்களுக்கு மாலை நேர வகுப்பு துவக்கம்
குழந்தை தொழிலாளர்களுக்கு மாலை நேர வகுப்பு துவக்கம்
குழந்தை தொழிலாளர்களுக்கு மாலை நேர வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 05, 2011 02:44 AM
திருத்தணி : ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தை தொழிலாளர்களுக்கு, மாலை நேர பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'ஹேண்ட் இன் ஹேண்ட்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர்கள் அகற்றும் முறை திட்டத்தின்கீழ், மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கப்பட்டன.ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மங்கம்மாள் தலைமை வகித்தார்.ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீஸ்வரி, குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை துவங்கி வைத்து, மாலை நேரப் பயிற்சி வகுப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கி, இதன் மூலம் குழந்தைகள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளலாம் என பேசினார்.குழந்தை உரிமை பாதுகாப்பு குழுத் தலைவர் பழனி பேசும் போது, ''குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்,'' என்றார்.இந்த பயிற்சி, முழுக்க முழுக்க இக்கல்வி ஆண்டுக்கு மட்டும் தான். கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.இதில் அனைத்து குழந்தைகளும், மாலை நேர பயிற்சி வகுப்பில் சேர்த்து பயன் பெறலாம். பகுதி ஒருங்கிணைப்பாளர் ராணிமேரி நன்றி கூறினார்.