/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூலித் தொழிலாளியை கொலை செய்தவர் கைது
/
கூலித் தொழிலாளியை கொலை செய்தவர் கைது
ADDED : ஆக 05, 2011 02:45 AM
பொன்னேரி : விவசாய மின்மோட்டார் திருட்டை தடுக்க சென்ற கூலித் தொழிலாளியை, கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.பொன்னேரி அடுத்த, பரிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராம ரெட்டி மகன் மோகன், 45; கூலித் தொழிலாளி.
இரு தினங்களுக்கு முன் மோகன், பாத்ரூம் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, அவரது வீட்டருகில் மர்ம நபர், விவசாய மின் மோட்டாரை கழற்றிக் கொண்டிருந்தார்.அதை கவனித்து, சத்தம் போட்ட மோகனை, மர்ம நபர் கையிலிருந்தகட்டிங் பிளேயரால் தாக்கி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பினார்.தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, கொலையுண்டு இறந்த மோகனின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார், பரிக்கப்பட்டு, சின்னகாவணம், பெரியகாவணம், உப்பளம் ஆகிய பகுதிகளில், விவசாயப் பொருட்களை திருடுபவர்கள் யார் யார் என விசாரணை மேற்கொண்டனர்.அப்போது பரிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், 32 என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, மோகனை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் சுதாகரை கைது செய்து, இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.