/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிகள் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
பள்ளிகள் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 23, 2011 01:24 AM
ஊத்துக்கோட்டை : அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளி, அஞ்சல் நிலையம், மின்வாரிய அலுவலகம், சார்நிலைக் கருவூலம் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளன.காலை, மாலை வேளைகளில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர்.அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள திருவள்ளூர் சாலையில், போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
பஸ்களை சாலை ஓரங்களில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல்வேறு பணிகள் காரணமாக வாகனங்களில் செல்வோர், அசுர வேகத்தில் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.அரசு மற்றும் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரியிடம் கேட்டதற்கு, 'மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் அருகே விரைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்