/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
"தினமலர்' செய்தி எதிரொலி சீரானது கழிவுநீர் கால்வாய்
/
"தினமலர்' செய்தி எதிரொலி சீரானது கழிவுநீர் கால்வாய்
"தினமலர்' செய்தி எதிரொலி சீரானது கழிவுநீர் கால்வாய்
"தினமலர்' செய்தி எதிரொலி சீரானது கழிவுநீர் கால்வாய்
ADDED : ஆக 23, 2011 01:56 AM
பொன்னேரி : 'தினமலர்' செய்தியால், புதரில் மறைந்து கிடந்த கழிவுநீர்
கால்வாய், பேரூராட்சி ஊழியர்களால் சீர் செய்யப்பட்டது.பொன்னேரி
பேரூராட்சிக்கு உட்பட்ட, 13வது வார்டு பகுதியில் உள்ள அன்னை தெரசா
தெருவில், கழிவுநீர் செல்வதற்காக, 260 மீட்டர் நீளத்திற்கு கால்வாய்
அமைக்கப்பட்டது. அன்னை தெரசா தெருவில் துவங்கி வாணியங்குளம் வரை
அமைக்கப்பட்ட கால்வாய், நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புவாசி
களுக்கு பயனுள்ளதாக இருந்தது.பேரூராட்சி நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு
இல்லாமல், குப்பைகள் தேங்கி, கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. மேலும்,
செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி, கால்வாய் இருந்த இடம் தெரியாமல்
மறைந்து போனது.அப்பகுதியில் வசிப்பவர்கள், பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை
புகார் தெரிவித்தும், நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்
இருந்தது.இதுகுறித்து, 19ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி
வெளியானது. இதைத் தொடர்ந்து, பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு
கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளையும், செடி, கொடிகளையும் அகற்றினர்