sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டில் சூதாட்ட கிளப்: ரூ.1.20 லட்சத்துடன் 5 பேர் கைது

/

வீட்டில் சூதாட்ட கிளப்: ரூ.1.20 லட்சத்துடன் 5 பேர் கைது

வீட்டில் சூதாட்ட கிளப்: ரூ.1.20 லட்சத்துடன் 5 பேர் கைது

வீட்டில் சூதாட்ட கிளப்: ரூ.1.20 லட்சத்துடன் 5 பேர் கைது


ADDED : ஆக 23, 2011 01:57 AM

Google News

ADDED : ஆக 23, 2011 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே வீட்டில் பணம் வைத்து மங்காத்தா சூதாட்டம் விளையாடிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 150 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் அடுத்த, திரூர் சீனிவாச நகர் பகுதியிலுள்ள வீட்டில், பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று செவ்வாப்பேட்டை எஸ்.ஐ., பாலாஜி மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, வீட்டுக்குள் பணம் வைத்து மங்காத்தா விளையாடிக் கொண்டிருந்த திரூர் ஏசு, 45, திருவள்ளூர் விக்னேஸ்வர் நகரைச் சேர்ந்த அன்வர், 47, தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 31, முகுந்தன், 30 மற்றும் காக்களூர் ஆஞ்சநேயர்புரத்தைச் சேர்ந்த வாசு, 56, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 150 ரூபாய் பணத்தையும், சீட்டுக் கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

மணல் திருடிய 13 வாகனங்கள் பறிமுதல்: 12 டிரைவர்கள் கைது

திருவள்ளூர் : மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில், மணல் திருடியதாக ஒரே நாளில், 11 லாரிகள் மற்றும் 2 டிராக்டர்களை போலீசார், 145 டன் மணலுடன் பறிமுதல் செய்தனர். இதன் டிரைவர்கள், 12 பேரை கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் இரவு நேரத்தில், தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக போலீஸ் எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவை அடுத்து, மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து சோதனை நடத்தினர்.சோதனையில் மெய்யூர் பகுதியில், 9 டன் மணல் திருடி வந்த லாரியை பெரியபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர் தப்பிவிட்டார். அம்மையார்குப்பம், வங்கனூர் பகுதியில், 4 டன் மணல் திருடி வந்த இரண்டு டிராக்டர்களை, ஆர்.கே.பேட்டை எஸ்.ஐ., அலமேலு பறிமுதல் செய்தார். அதன் டிரைவர்கள் எல்லபள்ளி பெருமாள், 34 மற்றும் மதி, 23 ஆகிய இருவரையும் கைது செய்தார்.கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், 107 டன் மணல் திருடி வந்த, 8 லாரிகளை இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர்களான தண்டலம் விஜய், 23, பாடியநல்லூர் குட்டி, 26, கரடிபுத்தூர் பார்த்திபன், 22, தேவம்பட்டு அரிகுமார், 43, டி.பி.கோட்டை பரூக் பாஷா, 25, காந்தி நகர் ராமு, 35, காளஹஸ்தி செஞ்சய்யா, 30 மற்றும் எளாவூர் அன்பு, 22 ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.எளாவூர் பஜார் வழியாக, 9 டன் மணல் திருடி வந்த லாரியை ஆரம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவரான துராப்பள்ளம் சுதாகர், 28 என்பவரையும் கைது செய்தனர். கவரைப்பேட்டை வழியாக, 16 டன் மணல் திருடி வந்த லாரியை, போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிரைவரான கீழ்முதலம்பேடு சம்பத், 23 என்பவரையும் கைது செய்தனர்






      Dinamalar
      Follow us