/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிட, பழங்குடி பெண்களுக்கு பேறுகால உதவியாளர் இலவச பயிற்சி
/
ஆதிதிராவிட, பழங்குடி பெண்களுக்கு பேறுகால உதவியாளர் இலவச பயிற்சி
ஆதிதிராவிட, பழங்குடி பெண்களுக்கு பேறுகால உதவியாளர் இலவச பயிற்சி
ஆதிதிராவிட, பழங்குடி பெண்களுக்கு பேறுகால உதவியாளர் இலவச பயிற்சி
ADDED : ஆக 29, 2011 11:12 PM
திருவள்ளூர் : தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்களுக்கு அளிக்கப்பட உள்ள, இலவச பேறுகால உதவியாளர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஈக்காடு, செங்குன்றம் சாலையிலுள்ள, சி.எஸ்.ஐ., மருத்துவமனையில், 20 நபர்களுக்கு, 18 மாத கால பயிற்சி அளிக்கப்படும்.இப்பயிற்சியில் சேர, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவியர், பணி நாட்களில் காலை 10 மணிக்கு அசல் மற்றும் சான்றிடப்பட்ட ஜாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 2 புகைப்பட நகல்களுடன், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி நிறுவனத்தில், நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.பயிற்சியில் சேர்வதற்கு மாணவியர், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாணவியருக்கு பயிற்சிக் கட்டணம், தாட்கோவினால் வழங்கப்படும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.