/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீபாவளி வருது; பெண்களே உஷார் துண்டு பிரசுரம் கொடுத்த போலீசார்
/
தீபாவளி வருது; பெண்களே உஷார் துண்டு பிரசுரம் கொடுத்த போலீசார்
தீபாவளி வருது; பெண்களே உஷார் துண்டு பிரசுரம் கொடுத்த போலீசார்
தீபாவளி வருது; பெண்களே உஷார் துண்டு பிரசுரம் கொடுத்த போலீசார்
ADDED : செப் 17, 2011 10:38 PM
திருவள்ளூர் : பண்டிகையையொட்டி நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பெண்களை உஷார்படுத்தி, திருவள்ளூர் டவுன் போலீசார் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வினியோகித்து வருகின்றனர்.திருவள்ளூர் நகரில் திருடர்கள் ஜாக்கிரதை, பெண்களே உஷார் என, துண்டுப் பிரசுரங்களை மொபைல் எண்ணுடன் அச்சிட்டு, திருவள்ளூர் டவுன் போலீசார், நகரம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வினியோகித்து வருகின்றனர்.அந்த துண்டுப் பிரசுரத்தில், 'வரும் தீபாவளி பண்டிகையையொட்டி விலை மதிப்புமிக்க நகைகளை கொள்ளையடிக்க, செயின் பறிக்க திருடர்கள் முயற்சிக்கலாம்.
எனவே அதிக நகைகளை அணிந்து கொண்டு பகலிலோ, இரவிலோ பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்.பெண்களே, உங்களை பின் தொடர்ந்தோ அல்லது அருகாமையிலோ வாகனங்கள் செல்லும்போது கவனமாக இருக்கவும். அவர்கள் உங்கள் செயினை பறிக்கலாம். வீட்டில் தனியாக உள்ள பெண்கள், யாராவது வெளியில் நின்று அழைத்தால், யார் என பார்த்து கதவை திறக்கவும்.மேலும் திருவள்ளூர் டவுன் போலீசார் பகல், இரவு பாராமல் ரோந்து சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். உடனடி தொடர்புக்கு இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசாரை 98403 76696, 94456 53334, 94432 75680 ஆகிய மொபைல் எண்களில், நகர மக்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு துண்டுப் பிரசுரத்தில் உள்ளது.