/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூர் அணி வெற்றி
/
ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூர் அணி வெற்றி
ADDED : செப் 25, 2024 06:43 AM

திருவள்ளூர் : ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி 3ம் இடம் பிடித்தது.
திருவள்ளூர் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி கடந்த மாதம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற, 237 பேர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இந்த நிலையில், மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி, கடந்த 20 - 22ம் தேதி ஈரோடு எஸ்.டி.ஏ.டி., ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்ட தடகள அணி வீரர், வீராங்கனையர் 237 பேர் பங்கு பெற்றனர்.
போட்டியின் துவக்க விழாவில் அணி வகுப்பு நடைபெற்றதில், திருவள்ளூர் மாவட்ட தடகள அணி முதலிடம் பெற்றது.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்றோருக்கு, தமிழ்நாடு தடகள செயலர் லதா கோப்பை வழங்கினார். உடன், மாநில தடகள சங்க இணை செயலர் மோகன்பாபு, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலர் மோகன்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.