/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை
/
சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை
சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை
சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை
ADDED : ஏப் 17, 2025 01:48 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு டோல்கேட் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர்.
அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் 15 அடி துாரம் சென்று நிறுத்தி விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அவரை பிடிக்க முயன்றபோது, சாலையோர பள்ளத்தில் விழுந்தார்.
இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்ததில், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்பன், 30, என்பதும், இவர் மீது வழிப்பறி, அடிதடி என, பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.