/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மையார்குப்பத்தில் திருவள்ளுவர் தின விழா
/
அம்மையார்குப்பத்தில் திருவள்ளுவர் தின விழா
ADDED : ஜன 15, 2025 11:41 PM
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராம பசுமை இயக்கம் சார்பில் நேற்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கிராம பசுமை இயக்க உறுப்பினர்கள் மற்றும் தமிழறிஞர்கள் என, திரளானோர் இதில் பங்கேற்றனர். அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் பலரும் திருக்குறள் குறித்த விளக்கவுரை ஆற்றினர்.
இதேபோல, ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, சந்திரவாடா கிராமத்திலும், நேற்று, திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பலரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றனர்.

