/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூக்கு மாநகர பஸ் கும்மிடி எம்.எல்.ஏ., உறுதி
/
திருவள்ளூக்கு மாநகர பஸ் கும்மிடி எம்.எல்.ஏ., உறுதி
திருவள்ளூக்கு மாநகர பஸ் கும்மிடி எம்.எல்.ஏ., உறுதி
திருவள்ளூக்கு மாநகர பஸ் கும்மிடி எம்.எல்.ஏ., உறுதி
ADDED : டிச 26, 2024 03:23 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு, தனியார் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இங்கு பணியாற்றும் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஊத்துக்கோட்டை வரவும், இங்கிருந்து திருவள்ளூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் அரசு, தனியார் பேருந்துகளை நம்பி உள்ளனர்.
திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து, ஊத்துக்கோட்டைக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. மற்றவை தனியார் பேருந்துகள். இதில் பயணியரை புளிமூட்டை போல ஏற்றிச் செல்கின்றன. இதனால் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.
பாடியநல்லுார் மாநகர பேருந்து பணிமனையில் இருந்து, செங்குன்றம் - ஊத்துக்கோட்டை இடையே, எட்டு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து வெள்ளியூர், தாமரைப்பாக்கம், வெங்கல் வழியே பெரியபாளையத்திற்கு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை வழித்தடத்தில் மாநகர பேருந்து இயக்கவில்லை. எனவே, மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் மாநகர பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராசன் கூறுகையில், “சமீபத்தில் ஆவடி - ஆரணி மாநகர பேருந்து, புதுவாயல் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விரைவில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையே மாநகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

