ADDED : ஜன 30, 2026 06:59 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா, 'இது நம்ம ஆட்டம்' ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டி, கடந்த, 22-25ம் தேதிகளில், நடந்தது.
இந்த போட்டிகளில், முதல் இடம் பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டி, இன்று துவங்கி, பிப்.1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில், முதல் மூன்று இடம் பெறுவோருக்கு முறையே, 6,000, 4,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில், முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கலாம்.
மாநில அளவில், முதல் மூன்று இடம் பெறுவோருக்கு முறையே, 75,000, 50,000 மற்றும் 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

