/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் வீடுகள் கட்டுபவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்
/
திருத்தணியில் வீடுகள் கட்டுபவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்
திருத்தணியில் வீடுகள் கட்டுபவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்
திருத்தணியில் வீடுகள் கட்டுபவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 21, 2025 07:07 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், புதியதாக வீடுகள் கட்டுபவர்கள், நகராட்சி அலுவலகத்தில் அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை நகராட்சி அதிகாரிகள் பரிசீலனை செய்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்குவர். இதற்காக, நகராட்சி அலுவலகம் அனுமதிக்காக பலமுறை பயனாளிகள் வந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆவணங்கள் காண்பித்து போராடி சான்றிதழ் பெற வேண்டியிருந்தது.
தற்போது, இணையம் வாயிலாக விண்ணப்பித்து கட்டட அனுமதி பெறலாம்.
இது குறித்து திருத்தணி நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
நகராட்சி மக்கள் நலன் கருதி, கடந்தாண்டு ஜூலை மாதம் முதல், 2,500 சதுரடி வரை பரப்பளவு மனையில், தரைத்தளம் மற்றும் முதல் மாடி என, மொத்தம், 3,500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டுமானத்திற்கு சுய சான்றிதழின் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் போது, நிலத்தின் பட்டா, கட்டட வரைப்படம், பத்திரம், வரி ரசீது, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அதற்கான கட்டணமும் இணையம் வாயிலாக செலுத்தி சான்று பெறலாம்.
இதனால், வீடுகள் கட்டுவதற்கு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, நகர மக்கள் வீடுகள் கட்டுவதற்கு, இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.