ADDED : பிப் 26, 2024 11:16 PM
அ நிறம் | அளவு
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியாக, அக்காரக்கனி எனப்படும் பக்தோசித பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.
சோளிங்கரை சேர்ந்த தொட்டாச்சாரியார் என்பவருக்கு காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், கருட வாகனத்தில் சோளிங்கரில் எழுந்தருளி தொட்டாச்சாரியாருக்கு காட்சியளித்தார் என்பது ஐதீகம்.
இதனால், தொட்டாச்சாரியாருக்கு உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று துவங்கிய தொட்டாச்சாரியார் உற்சவத்தில் காலை 10:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 5:00 மணிக்கு புறப்பாடும் நடந்தது. உற்சவம் வரும் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
