/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 01, 2025 12:28 AM

திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், திருப்படித் திருவிழா நேற்று துவங்கியது.
விழாவையொட்டி, காலை 8:15 மணிக்கு சரவண பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முதல் பஜனை குழுவினரை வரவேற்று, முதல் படியில் பூஜை செய்தும், படித்திருவிழாவை துவக்கி வைத்தனர்.
பின், கோவில் ஊழியர்கள், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மலைக்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர்.
மேலும், திரளான பெண் பக்தர்கள் படித் திருவிழாவையொட்டி ஒவ்வொரு படியில், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்தனர்.
தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒருமுறை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
	திருத்தணி சுந்தர விநாயகர் கோவில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், விஜயராகவ பெருமாள் ஆகிய கோவில் நள்ளிரவு 12:01 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்டையொட்டி சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
அதே போல, அருங்குளம் கூட்டுச் சாலையில், சத்திய சாட்சி கந்தன் கோவில், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நெமிலி வைகுண்ட பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று மாலை முதல் பஜனை குழுவினர் பக்தி பாடல்களை நள்ளிரவு, 12:00 மணி வரை தொடர்ந்து பாடினர்.
தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு பிறப்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள சர்ச்சுகளில் ஆங்கில புத்தாண்டையொட்டி இரவு முழுதும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

